திரைப்பட சாகசத்தை மிஞ்சிய உண்மை சகாசம் வாழ்த்துவோம் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை

திரைப்பட  சாகசத்தை மிஞ்சிய உண்மை  சகாசம்  வாழ்த்துவோம்
அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை


மனித நேயம் வென்றது: 365 கி.மீ தூரத்தை கடந்து சென்று குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்...

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்,  குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி காய்ச்சல் என்றும் அதற்கான சிகிச்சை இங்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

அதற்கான சிகிச்சை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் 7 மணி நேரத்திற்குள் அழைத்துச்சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது, ஆனால் திருவனந்தபுரத்திற்கு 365 கி.மீ செல்ல வேண்டும், குறைந்தபட்சம் 10 மணி நேரமாகும் என்று கூறியதால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இவர்களின் கதறல் சத்தத்தை கேட்டு மருத்துவமனை அருகே இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஓடி வந்தனர்.  நிலைமையை அறிந்து குழந்தையை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி அங்கிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் தெவித்தனர். அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று விபரத்தை கூறி போக்குவரத்தை சீர் செய்தனர். இதன் மூலம் 365 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து வந்தனர். பின்னர் குழந்தைக்கும் நல்லபடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மனிதநேயத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பது இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்
திரைப்பட சாகசத்தை மிஞ்சிய உண்மை சகாசம் வாழ்த்துவோம் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை திரைப்பட  சாகசத்தை மிஞ்சிய உண்மை  சகாசம்  வாழ்த்துவோம் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை Reviewed by Unknown on 00:54 Rating: 5

No comments:

Powered by Blogger.