கொத்துக் கறி சட்னி | how to make kothu kari in tamil

கொத்துக் கறி சட்னி எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு தேங்காய்சில் -1
வத்தல் - 5
சின்ன வெங்காயம் - 250 கிராம்
சீரகம் - 3 ஸ்பூன்
பூண்டு- 10 பல்
மல்லி - 3 ஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - முக்கால் ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பட்டை ' 2
அன்னாசிப் பூ - 2
சிரம்பு
கசகசா - 1 ஸ்பூன்

செய்முறை :

தேங்காய், இஞ்சி, வற்றல், சீரகம், மல்லி, மிளகு, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கசகசா 1 ஸ்பூன் முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டையும் போட்டு நன்றாக கிளறவும். பின்பு கொத்துக் கறியுைம் போட்டு வதக்கி தேவையான உப்பு, மஞ்சள் போட்டு அரைத்த மசாலாப் பொடி போட்டு வேக வைத்து இறக்கவும்

கொத்துக் கறி சட்னி | how to make kothu kari in tamil கொத்துக் கறி சட்னி  | how to make kothu kari in tamil Reviewed by Unknown on 20:51 Rating: 5

No comments:

Powered by Blogger.