சீடை எப்படி செய்வது | seedai healthy food

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 2 கப் (லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்)
உளுந்து 1/4 கப் (வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். )
சிறிது பெருங்காயத்தூள்
எள்
மிளகு

செய்முறை

அரிசி மாவுடன் உளுந்து மாவு ,
வெண்ணெய் சிறிது,பெருங்காயத்தூள்,எள், மிளகு  எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். 

உப்பு நீர் விட்டு மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

சிறுசிறு உருண்டைகளாக அழுத்தாமல் உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உருட்டியும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சீடை எப்படி செய்வது | seedai healthy food சீடை எப்படி செய்வது | seedai  healthy food Reviewed by Unknown on 22:06 Rating: 5

No comments:

Powered by Blogger.