சப்பாத்தி லட்டு எப்படி செய்வது?
சப்பாத்தி லட்டு
தேவையானவை:
சப்பாத்தி - 3 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3
பாதாம் - 6 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
செய்முறை:
சப்பாத்தி துண்டுகளுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதனுடன் பாதாம் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேலே தேங்காய்த் துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
சப்பாத்தி லட்டு எப்படி செய்வது?
Reviewed by Unknown
on
02:28
Rating:
No comments: