சுவையான பால்கோவா செய்வது எப்படி?
இந்த பதிவில் எப்படி பால்கோவா செய்வது என்று பார்ப்போம். உங்க வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பால் – 1 /2 லிட்டர்
தயிர் – சிறிது
சக்கரை – 50 கிராம்
நெய் – 2 1/2 ஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
செய்யும் முறை விளக்கம்
மொத்தமான பாத்திரத்தில் பாலை ஊற்றி் நன்றாக கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் சிறிதளவு தயிரை பாலில் விடவும்.
அடுத்து பால் பொங்கும் போது நன்றாக. கிளறிக் கொண்டே இருக்கவும். பால் கட்டிவிடாமால் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
பிறகு பால் சுண்டியாதும் தேவையான அழவு சர்க்கரையை சேர்ந்து நன்றாக கிளறவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் உற்றி முந்திரியை பொறித்து எடுக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்ந்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.
பிறகு பொடி செய்த முந்திரியை பாலில் சேர்ந்து நன்றாக கிளறவும்.
பின்னர் பால் கெட்டியாக ஆரம்பிக்கும் போது 2 கரண்டி நெய்யை பாலில் சேர்ந்து கிளறவும்
சிறிது நேரம் நன்றாக கலக்கி கொண்டே இருக்கவும். பின்னர் பால்கோவா கட்டி கட்டியாக வரும் போது இறக்கிவிடவும். இதன் உடன் நெய் சேர்த்துள்ளதால். சிறிது நேரத்தில் நன்றாக கட்டி ஆகும்
இதன் மேல் முந்திரி போட்டு இறக்கினால் சுவையான பால்கோவா தயார்
No comments: