கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி
#கோவைக்காய் #பொரியல்
.
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
.
வறுத்துத்து அரைத்துக்கொள்ளவும் :
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2 தேக்கரண்டி
தோல் நீக்கிய நிலக்கடலை - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 1
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு
-
#செய்முறை.
1. கோவைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
.
2. எண்ணெயில் தாளிக்க வைத்துள்ள பொருட்களை தாளித்து வைத்துக்கொண்டு கோவைக்காயையும் சிறிது நீர் சேர்த்து உப்பைச் சேர்த்துக்கொள்ளவும்
.
3. காய் நன்றாக வெந்ததும் அரைத்த தூளைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
-
#கோவைக்காயிலுள்ள ஊட்ட சத்துக்கள்:
1. வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
.
2. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். கோவைக்காய் உண்டவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
.
3. கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதைச் சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
.
4. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
.
5. கண் குளிர்ச்சியை உண்டாக்கும்.
.
6. இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
.
7. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
.
No comments: