காளான் உண்ணாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் மொறு மொறு காளான் பஜ்ஜி
மொறு மொறு காளான் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
காளான் - 20
கடலைமாவு- 1 1/2கப்
அரிசி மாவு - 4 கரண்டி
சோளமாவு-4 கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள்-1 கரண்டி
பெருங்காயத்தூள்-1/ 4 கரண்டி
சீரகம்-1 கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.காளானை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2.பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,சோளமாவு,அரிசி மாவு, மிளகாய் தூள்,மிளகுத்தூள்,சீரகம்,உப்பு ,பெருங்காயம்,உப்பு சேர்த்து பிசறிக் வைத்து கொள்ளவும் .
3.அடுத்து தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
4.அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
5.காளானை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
இதேப் போல் அனைத்து காளானையும் பொரித்து எடுத்தால், காளான் பஜ்ஜி ரெடி!!!
இதே மாவில் உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறிகளையும் சேர்த்து வறுத்து பஜ்ஜி செய்து உண்ணலாம்.
காளான் உண்ணாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் மொறு மொறு காளான் பஜ்ஜி
Reviewed by Unknown
on
04:55
Rating:
Reviewed by Unknown
on
04:55
Rating:

No comments: