கறிவேப்பிலை குழம்பு Karuveppilai Kuzhambu-Curry Leaves Kulambu

கறிவேப்பிலை குழம்பு.

தேவையான பொருட்கள் :-

கறிவேப்பிலை 15 ஆர்க் .

தேங்காய் துருவியது 1/2  மூடி

காய்ந்த மிளகாய் 5

மிளகு சிறிது

துவரம் பருப்பு 1 டீஸ்பூன்.

கடலை பருப்பு 1 டீஸ்பூன்.

கொத்தமல்லி தூள் 1 டீஸ்பூன்.

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்.

புளி சிறிதளவு.

உப்பு தேவையான அளவு.

வெந்தயம் 1/4 டீஸ்பூன்.

கடுகு 1/4 டீஸ்பூன்.

பெருங்காயம் சிறிது.

பூண்டு 6 பல்.

சின்ன வெங்காயம் 7.

நல்லெண்ணெய் 2  கரண்டி.

செய்முறை :-

கடலை பருப்பு,  துவரம் பருப்பு,  கொத்த மல்லி தூள், மிளகாய், மிளகு அனைத்தையும் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இறுதியாக தேங்காய்,  கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு  வதக்கியதை ஆரவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு. கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும் பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இதன் உடன் அரைத்த விழுதை சேர்த்து  புளிக்கரைசல் ,மஞ்சள் தூள், மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். இடைவெளி விட்டு  கிளறவும். எண்ணெய் பிரியவும் நன்றாக கொதித்த பின்னர். சூடான சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.

இதை ஒரு வாரம் கெடாமல் இருக்கும். ஈரம் இல்லாத கரண்டியை உபயோக படுத்தினால்.

வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் நோய் இன்றி வாழ முடியும்.இது சளி மற்றும் உடம்பு வலிக்கு மிகவும் நல்லது.

#Chettinad #Karuveppilai #Kuzhambu | #South_Indian_kuzhambu_recipes

கறிவேப்பிலை குழம்பு Karuveppilai Kuzhambu-Curry Leaves Kulambu கறிவேப்பிலை குழம்பு  Karuveppilai Kuzhambu-Curry Leaves Kulambu

Reviewed by Unknown on 23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.