வெஜிடபிள் இட்லி vegetables idle | how to make masala vegetable idli

வெஜிடபிள் இட்லி vegetables idle ஒரு தடவை செய்து பாருங்க திரும்ப திரும்ப செய்விங்க

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி : 250 கிராம்

பச்சரிசி : 125 கிராம்

உளுந்தம் பருப்பு : 100 கிராம்

எண்ணெய் : 50 கிராம்

காரட்,கோஸ்,பீன்ஸ் நூக்கல் எல்லாம் கலந்தது : 250 கிராம்

பச்சை மிளகாய் : 5

வெந்தியம் 1 ஸ்பூன

கடுகு,சிரகம் ,கருவேப்பிலை கொத்தாமல்லி,உப்பு : தேவையான அளவு

செய்முறை :

* முதலில் புழுங்கல் அரிசி,பச்சரிசி,உளுந்தம் பருப்பு,வெந்தியம் ஆகியவற்றை முதல் நாள் மாலை தனித்தானியாக ஊற வைத்து இட்லி மாவு அரைப்பது போன்று அரைத்து அதில் தேவையான
உப்பு சேர்ந்து கலக்கி மூடி வைத்து விடவும்.

* மறுநாள் காலையில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்ந்து நீர்விட்டு அரை வேக்காட்டில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் ,கொத்தமல்லி,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்ந்து வதக்கி வேகவைத்துள்ள காய்கறிகளை இதில் கொட்டி சேர்ந்து வதக்கிக் கொள்ளவும்.

* காய்கறி நன்றாக வதங்கியதும். இட்லி  மாவில் கொட்டி நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* இப்போது சூடான சுவையான வெஜிடபிள் இட்லி ரெடி.இதற்கு கொத்த மல்லி சட்னி மற்றும் புதினா சட்னி வைத்துக்கொண்டு சாப்பிட்டால் மிகவும்
அருமையாக இருக்கும்.

வெஜிடபிள் இட்லி vegetables idle | how to make masala vegetable idli வெஜிடபிள் இட்லி vegetables idle  | how to make masala vegetable idli Reviewed by Unknown on 21:54 Rating: 5

No comments:

Powered by Blogger.